உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அகற்றப்படாத இடிந்த செட்டிநாடு போலீஸ் ஸ்டேஷன்

 அகற்றப்படாத இடிந்த செட்டிநாடு போலீஸ் ஸ்டேஷன்

காரைக்குடி: செட்டிநாடு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் 9 ஆண்டுகளாகியும் பழைய கட்டடம் அகற்றப்படாமல் உள்ளது. காரைக்குடி உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, அனைத்து மகளிர், அழகப்பபுரம், குன்றக்குடி, பள்ளத்துார், செட்டிநாடு, சாக்கோட்டை, சோமநாதபுரம் மற்றும் குற்றப்பிரிவு என 10 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. செட்டிநாடு பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கட்டடம் சேதமடைந்த நிலையில், பழைய கட்டடத்தை ஒட்டி புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டது. 2016 ஆம் ஆண்டு புதிய கட்டடம் திறக்கப்பட்டது. புதிய ஸ்டேஷன் திறக்கப்பட்டு 10 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் இதுவரை பழைய கட்டடம் அகற்றப்படவில்லை. விஷ பூச்சிகள் தங்கும் இடமாகி விட்டது. புதுக்கோட்டை எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில், வாகன சோதனையில் சிக்கிய பல்வேறு கனரக வாகனங்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இவை அகற்றப்படாமல் துருப்பிடித்து வீணாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை