உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆதார் கார்டு பெற புதிய நடைமுறை அக்.15 முதல் அமலுக்கு வருகிறது

ஆதார் கார்டு பெற புதிய நடைமுறை அக்.15 முதல் அமலுக்கு வருகிறது

சிவகங்கை:புதிய ஆதார் கார்டுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் தாசில்தார் விசாரணைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கும் நோக்கில் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் சேவை மையங்களில் விண்ணப்பித்து இதனை மக்கள் பெறலாம். கார்டில் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கார்டு கோரி மையங்களில் விண்ணப்பித்தால் விசாரணைக்காக ஆன்லைன் மூலம் யு.ஐ.டி.ஏ.ஐ., ஒருங்கிணைந்த மையத்திற்கு செல்லும்.ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு ஆதார் கார்டு வழங்கப்படும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், அது குறித்து விசாரணை நடத்த அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தாசில்தார் தலைமையில் ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் உண்மை தன்மையை நேரடியாக கள ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும். தாசில்தார் ஒப்புதல் அளித்த பின்னரே ஆதார் கார்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் சேவை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக ஆதார் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பிற மாநிலங்களில் ஆதார் கார்டு இருக்கிறதா, இலங்கை அகதியாக வந்துள்ளாரா என்பது உட்பட பல்வேறு கோணத்தில் தாசில்தார்கள் விசாரணை செய்து, ஒப்புதல் அளித்த பின்னரே வழங்கப்படும். இதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அக்., 15 முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை