மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சைக்கிள் பயணம்
13-Jan-2025
திருப்புவனம் : விருந்தோம்பலில் சிறந்தவர்கள் தமிழக,கேரள மக்கள் என சுற்றுப்புற சூழலை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொண்டு வரும் சுற்றுலா பயணி ஓம்பிரகாஷ் புத்தா தெரிவித்தார். ஹரியானா ஓம்பிரகாஷ் புத்தா என்ற 60 வயது முதியவர் 50 ஆயிரம் கி.மீ., சுற்றுப்புற சூழலை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டுள்ளார்.2023, மே 5ம் தேதி பயணத்தை தொடங்கிய அவர் திருப்புவனம் வந்தார்.ஓம்பிரகாஷ் புத்தா கூறுகையில்:மற்ற மாநிலங்களை விட தமிழகம் மற்றும் கேரள மக்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்குகின்றனர். வெளி மாநில பயணி என தெரியவரும் போது தேவையான வசதிகளை செய்து தருகின்றனர்.லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே என் எண்ணம், 21 மாதங்கள் 43 நாட்கள் பயணம் செய்துள்ளேன். ஏற்கனவே 21 ஆயிரம் கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்ட நான் தற்போது 50 ஆயிரம் கி.மீ., பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு பயணம் செய்து வருகிறேன். தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன், என்றார்.
13-Jan-2025