உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கைக்கு போதிய பஸ்கள் இல்லை இளையான்குடி மக்கள் அவதி

சிவகங்கைக்கு போதிய பஸ்கள் இல்லை இளையான்குடி மக்கள் அவதி

இளையான்குடி : இளையான்குடி, சிவகங்கை இடையே போதிய பஸ் வசதியின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தாயமங்கலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இளையான்குடி,சிவகங்கை இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்கள் இல்லாத காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சிவகங்கை பகுதியில் இருந்து இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இது குறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது, இளையான்குடியில் இருந்து சிவகங்கைக்கு இரு வழித்தடங்களிலும் போதிய பஸ்கள் இல்லை. போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. குறைவாக இயக்கப்படுகிற பஸ்களில் அதிகளவில் பயணிகள் செல்லும் சூழல் ஏற்படுகிறது.இதனால் மாணவர்கள் படிக்கட்டிகளில் தொங்கி கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. பயணிகள் வரத்திற்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை