உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து நால்வரை இரும்பு கம்பியால் தாக்கி 60 சவரன் கொள்ளை

அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து நால்வரை இரும்பு கம்பியால் தாக்கி 60 சவரன் கொள்ளை

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியைச் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் சின்னப்பன், 70. இவரது மனைவி உபகாரமேரி, 65. இவர்களது மகன்கள் ஜேக்கப், குமார், மகள் உள்ளார். இரு மகன்களும் துபாயில் உள்ளனர். ஜேக்கப்பின் மனைவி வேதபோதக அரசி, 30, மகள் ஜெர்லின், 12, மகன் ஜோபின், 10, ஆகியோர் சின்னப்பன் வீட்டில் வசிக்கின்றனர்.நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மர்ம நபர் இரும்பு கம்பியால் வாசலில் படுத்திருந்த சின்னப்பன் தலையில் தாக்கினார். பின், வீட்டிற்குள் நுழைந்து துாங்கிய மற்ற நான்கு பேர் தலையிலும் ஒருவர் பின் ஒருவராக கடுமையாக தாக்கினார்.இதில் அனைவரும் மயங்கிய நிலையில் பீரோவில் இருந்த 60 சவரன் நகைகளை கொள்ளையடித்து அந்த நபர் தப்பி சென்றார். தகவலறிந்த போலீசார், தலையில் கடும் வெட்டுக்காயங்களுடன் மயங்கிய நிலையிலிருந்த ஐந்து பேரையும் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.இச்சம்பவத்தை கண்டித்து சிவகங்கை - தொண்டி சாலையில் கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., அரவிந்த் அவர்களுடன் பேசி, மறியலை கைவிடச் செய்தார்.

ஒரே ஸ்டைலால் அச்சம்

கடந்த, 2020 ஜூலை 13ம் தேதி இரவு காளையார்கோவில் அருகே முடுக்கூரணி ராணுவ வீரர் ஸ்டீபன் வீட்டில் இருவரை கொன்று 58 சவரனை கொள்ளையடித்து தப்பினர்.கடந்த, 2023 ஜன., 10ம் தேதி இரவு தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் இருவரை கொலை செய்து பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்து தப்பினர்.அதே ஸ்டைலில் தான் கல்லுவழியில் நேற்று கொள்ளை நடந்துள்ளது. எனவே, அதே குற்றவாளி தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ