உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவு விரைவில் குடிநீர் விநியோகம் துவக்கம்

திருப்புத்துார் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவு விரைவில் குடிநீர் விநியோகம் துவக்கம்

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் குடிநீர் விநியோகம் துவங்க உள்ளது. ராமநாதபுரம் காவிரிக்கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சில பகுதிகள் பயன் பெறுகின்றன. விடுபட்ட மாவட்டத்தின் பிற பகுதி முழுவதிற்கும் காவிரி குடிநீர் விநியோகிக்க 2013ல் ரூ 1752.73 கோடியில் சிவகங்கை காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.2051ம் ஆண்டு உத்தேசிக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் 2021ல் இத்திட்டத்திற்கு நபார்டு வங்கி ரூ.1537.59 கோடியும், தமிழ்நாடு அரசு ரூ.215.14 கோடி நிதியும் அனுமதித்தன. 2021 பிப்ரவரியில் திட்டப் பணிகள் துவங்கியது. ஆக.2023ல் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, வருவாய்த்துறை, வனத்துறை என்று பிற துறைகளின் அனுமதி கிடைப்பதில் தாமதமானதால் 'ஆமை வேகத்தில்' பணிகள் நடந்தன.தற்போதும் சிலபகுதிகளில் வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. கீழப்பூங்குடி, எஸ்.ஆர்.பட்டினம், விசாலயன்கோட்டை உள்ளிட்ட சில இடங்களில் திட்டப் பணிகள் முடிவடையவில்லை. இருப்பினும் மற்ற பகுதிகளில் திட்டப்பணிகள் முடிவடைந்து விட்டது. இதனால் கடந்த சில வாரங்களாக குழாய்கள், தொட்டிகளில் குடிநீர் சோதனை ஓட்டம் நடந்தது. நீர் கசிவு பகுதிகளில் பராமரிப்புப் பணி முடிந்துள்ளது. தற்போது மேல்நிலை, தரைமட்டத் தொட்டிகள், குழாய்களில் இருந்த அசுத்தங்கள் முழுமையாக அகற்றப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் மூன்றாவது இறுதி சோதனை நீரோட்டம் நடத்தப்படும்.அரசு அறிவிக்கும் நாளில் குடிநீர் விநியோகம் துவங்கும். ஒன்றியம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள தரைமட்டத்தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் கிராமங்களுக்கு நடைபெறும். இத்திட்டத்தின் மூலம் 4 நகராட்சி, 7 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் உள்ள 2452 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி கிடைக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி