உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் ஏமாற்றம்

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் ஏமாற்றம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடையில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பயன்பாட்டை நீக்கியதால் வாங்காதவர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாட அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.இதனை பெறுவதற்காக டோக்கன் விநியோகம் 9ம் துவங்கி 14ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் இயந்திரங்கள் மூலம் கைரேகை வைத்து கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கினர்.மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்ட போது, மானாமதுரை பகுதியில் உள்ள 10 ரேஷன் கடைகளில் மொத்தம் 10 ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ள நிலையில் 600க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் உள்ளனர். தற்போது அவர்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குமாறு கேட்கின்றனர். ஆனால் பயோமெட்ரிக் இயந்திரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பயன்பாட்டினை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். நாங்கள் வாங்காத கார்டுதாரர்களுக்குரிய பணத்தையும்,பொருட்களையும் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டோம்.அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி