உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனையில் ஆக்கிரமிப்பு கடைகளால் வெட்டப்படும் மரங்கள்

அரசு மருத்துவமனையில் ஆக்கிரமிப்பு கடைகளால் வெட்டப்படும் மரங்கள்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு பலன் தரக்கூடிய மரங்களை ஆக்கிரமிப்பாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு தினசரி 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையை சுற்றிலும் காற்று மாசுபடுவதை தடுக்க மருத்துவமனை முகப்பு பகுதியில் டாக்டர்கள் மரக்கன்றுகளை நட்டனர். இதனை வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். இந்த மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து நிழல் தரும் நிலையில் ஜூன் 12 அன்று சிலர் இயந்திரம் மூலம் இவற்றை வெட்டி அப்புறப்படுத்தினர்.தற்போது இந்த பகுதியில் சிலர் கடைகள் வைப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் மருத்துவமனை முன்பு ரோட்டோரத்தில் புதிதாக ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து வருகிறது. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ், அரசு பஸ்கள் வர சிரமம் ஏற்படுகிறது. தாய்சேய் வார்டு எதிரே உள்ள சுற்றுச்சுவர் பகுதியில் உள்ள கம்பிகளை சேதப்படுத்தி அதில் சிலர் பெட்டிகளை அமைத்து அவ்வபோது வியாபாரம் செய்வதாகவும் புகார் உள்ளது. எனவே மரங்களை வெட்டி அப்புறப்படுத்துபவர்கள் மீதும் ஆக்கிரமிப்பு கடைகள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை