உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குப்பையில் கிடக்கும் டூவீலர்கள்

குப்பையில் கிடக்கும் டூவீலர்கள்

சிவகங்கை : காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள், கார்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வீணாகி வருகிறது.காளையார்கோவில் காளையப்பன் தெருவில் உள்ளது போலீஸ் ஸ்டேஷன். இந்த பகுதி குடியிருப்பு பகுதி. அருகில் போலீசார் குடியிருப்பு, சர்ச், கடைகள் உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பகுதியில் பல்வேறு வழக்குகளில் பிடிக்கப்பட்ட டூவீலர்கள், கார்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளனர்.இந்த பகுதியை சுற்றி முட் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுவதால் விஷ பூச்சிகள் தங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.போலீசார் பயனற்ற குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை