உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பதியாத மாடுகளுக்கு அனுமதியில்லை

பதியாத மாடுகளுக்கு அனுமதியில்லை

சிவகங்கை: சிவகங்கை கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டில் பதியாத மாடுகளுக்கு அனுமதியில்லை. 40 செக்போஸ்ட் அமைத்து கண்காணிப்பதுடன் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் கோவிலில் ஆண்டு தோறும் தை ஐந்தாம் தேதி மஞ்சு விரட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தொடர்ந்து அவசர சட்டம் இயற்றப்பட்டு 2017ம் ஆண்டு ஜனவரி முதல் இங்கு மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பதியாத மாடுகளை தவிர மற்ற மாடுகளுக்கு அனுமதியில்லை. கண்டுப்பட்டி கிராமத்தை சுற்றிலும் 40 செக்போஸ்ட்கள் அமைத்து எஸ்.பி., அர்விந்த் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை