உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத நிழற்குடை

பராமரிப்பில்லாத நிழற்குடை

காரைக்குடி: காரைக்குடி வ.உ.சி., ரோட்டில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் எதிரே பயணிகளுக்காக நிழற்குடை உள்ளது. மின் வாரிய அலுவலகம் வரும் மக்களும், காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அரசு மருத்துவமனை புது பஸ் ஸ்டாண்ட் திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்களும் இந்த நிழற்குடை பகுதியில் நின்று தான் பஸ்சில் செல்ல வேண்டும்.இந்த பயணிகள் நிழற்குடை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும். நிழற்குடையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி