உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

சிவகங்கை,; சிவகங்கையில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, நோய்பாதித்த தெருநாய்களை கருணைக்கொலை செய்வது, வெறிநோய் தடுப்பூசி போடுதல் உட்பட அறிவுறுத்தல்களை தெரிவித்தது. ரோட்டில் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பினார். கால்நடை பராமரிப்புத்துறை உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சிவகங்கையில் துவங்கியது. சிவகங்கையில் 33 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். கால்நடைதுறை உதவி இயக்குநர் ஞானசுப்பிரமணியன், டாக்டர்கள் பிரேம்குமார், மோகன்தாஸ், ராஜேஷ், கவியரசன், ஜெயகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை