உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் வடமஞ்சுவிரட்டு

திருப்புவனத்தில் வடமஞ்சுவிரட்டு

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று த.மா.க., சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், 12 காளைகள், 108 வீரர்கள் பங்கேற்றனர். ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படும். நேற்று நடந்த மஞ்சுவிரட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நவநீதகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் பங்கேற்றனர். இங்கு 12 காளைகள் பதிவு செய்யப்பட்டன.ஒரு காளைக்கு 20 நிமிடம் வீதம் ஒன்பது வீரர்கள் ஒரு காளையை அடக்க வேண்டும். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கினர். பிடிபடாத காளை உரிமையாளருக்கும் பரிசு வழங்கினர்.நேற்று மாலை 5:00 மணி வரை போட்டிகள் நடந்தன. த.மா.கா., தொண்டரணி மாநில தலைவர் அயோத்தி, நகர் தலைவர் பாரத்ராஜா ஆகியோர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை