உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பறக்கும் படை சோதனை; காத்திருந்த வாகனங்கள்

பறக்கும் படை சோதனை; காத்திருந்த வாகனங்கள்

சிவகங்கை : சிவகங்கை மதுரை ரோட்டில் பறக்கும் படையினர் இரவில் நடத்திய சோதனையால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பறக்கும் படையினர் சிவகங்கை மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சிவகங்கை லோக்சபா தொகுதியில் 36 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு கொடுக்கும் பரிசு பொருட்களை தடுக்கவும் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் சிவகங்கையில் மதுரை தொண்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இதனால் மதுரை தொண்டி ரோட்டில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட நேரம் காத்திருந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி