உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள்...நிறுத்தம்!: பார்க்கிங்காக மாறுவதால் நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள்...நிறுத்தம்!: பார்க்கிங்காக மாறுவதால் நோயாளிகள் அவதி

திருப்புவனம்:திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளிநபர்கள் பலரும் கார், பைக், வேன், சரக்கு வேன் உள்ளிட்டவைகளை நிறுத்துவதால் நோயாளிகள், மருத்துவமனை பணியாளர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு திருப்பு வனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் ஒரு வருடத்திற்கு 500க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. குறைப்பிரவசத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க முடியாததால் மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க அவசர கால மகப்பேறு குழந்தைகள் மருத்துவமனைக்காக மூன்று கோடியே 90 லட்சத்து 78 ஆயிரம் செலவில் கூடுதல் கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலையில் நடக்கும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை முதல் உதவி சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குதான் அழைத்து வரப்படுகின்ற னர். 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோர் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளா கத்தில் பலரும் கார், வேன், பைக் உள்ளிட்ட வற்றை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளனர். திருப்புவனத்தில் டூவீலர் பார்க்கிங் இல் லாததால் வெளியூரில் பணிபுரியும் பலரும் மருத்துவ மனைக்குள் வாகனங் களை நிறுத்தி செல்கின்ற னர். இதனால் அவசரத் திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே சென்று திரும்ப முடிவதில்லை. அரசு மருத்துவ மனைக்கு காவலாளி இல்லாத நிலையில் பலரும் வாகனங்களை நிறுத்துவதால் மருத்துவமனை பணியாளர்கள் வாகனங்களை நிறுத்த கூட இடமில்லை. வாகனங்களை நிறுத்துவதுடன் அதில் சிலர் அமர்ந்து மது அருந்தி தகராறில் ஈடுபடுகின்றனர். மருத்துவமனை வளாகத்தினுள் தனியார் வாகனங்களை நிறுத்த தடை இருந்தும் யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளி நபர்கள் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை