உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வேலுநாச்சியார் நினைவு நாள்

 வேலுநாச்சியார் நினைவு நாள்

சிவகங்கை: சிவகங்கையில் வேலு நாச்சியாரின் 229 வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர். நேற்று காலை 8:30 மணிக்கு சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மன்னர் கல்வி நிறுவனங்களின் குழு தலைவர் மகேஷ்துரை முன்னிலை வகித்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த 108 திருவிளக்கு பூஜையை கோயம்புத்துார் காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் துவக்கிவைத்தார். பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை, நகர் தலைவர் உதயா, தி.மு.க., நகர் செயலாளர் துரைஆனந்த், அ.தி.மு.க., செந்தில்நாதன் எம்.எல்.ஏ., காங்., மாவட்ட தலைவர் சஞ்சய், முன்னாள் எம்.எல்.ஏ.,ராஜசேகரன், நகர் தலைவர் விஜயகுமார், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு குழு மாவட்ட இளைஞரணி செயலாளர் சுந்தரபாண்டியன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க., மாவட்ட செயலாளர் முத்துபாரதி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி திருமாறன், அ.இ., பார்வர்டு பிளாக் கட்சி சுரேஷ் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் வேலுநாச்சியார் நினைவிடத்தில் மரியாதைசெலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ