உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சென்னை தாம்பரம் -- திருச்செந்துார் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா * பயணிகள் நல கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

சென்னை தாம்பரம் -- திருச்செந்துார் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா * பயணிகள் நல கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

சிவகங்கை:துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7 ல் நடக்கவுள்ள கும்பாபிேஷகத்தை காண வரும் பக்தர்களுக்காக சென்னை தாம்பரம் முதல் திருச்செந்துார், துாத்துக்குடி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நல கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.முருகனின் ஆறுபடை வீடுகளில் 2 ம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை 7 திங்களன்று கும்பாபிேஷகம் நடக்கவுள்ளது. ஹிந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிேஷகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. கும்பாபிேஷகத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் சென்னை தாம்பரத்திலிருந்து ஜூலை 5 மற்றும் 6 ல் திருச்செந்துார், துாத்துக்குடிக்கு இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். கும்பாபிேஷகம் முடிந்து பக்தர்கள் திரும்ப வசதியாக திருச்செந்துார், துாத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு ஜூலை 7 மற்றும் 8 ல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.இந்த ரயில்கள் விழுப்புரம், விருத்தாச்சலம், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி ஸ்டேஷன்கள் வழியாக இயக்கினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு பயணிகள் நல கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை