உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

 சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிவகங்கை: எஸ்.எஸ்.,கோட்டை அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை, அவரது தாய், தந்தைக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எஸ்.எஸ்.,கோட்டை அருகே சியாமுத்துப்பட்டி ஆண்டி மகன் அலெக்ஸ் 28. விறகு வெட்டும் வேலை செய்தார். இவர், அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். 2020 மே 16 ல் அச்சிறுமியிடம் அலைபேசியில் பேசி, எஸ்.எஸ்., கோட்டைக்கு வரவழைத்துள்ளார். அங்கிருந்து டூவீலரில் காரைக்குடிக்கு கடத்தி சென்று சூடாமணிபுரத்தில் உள்ள அலெக்ஸ் மாமா முருகன் வீட்டில் அடைத்து வைத்தார். அலெக்சின் தந்தை ஆண்டி 57, தாய் லட்சுமி 50, மாமா முருகன், உறவினர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறுமிக்கு, அலெக்ஸ் உடன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். பின்னர் போலீசார் உதவியுடன் சிறுமியின் தாய் அவரை மீட்டார். சிறுமியை கடத்தி, திருமணம் செய்ததோடு பாலியல் பலாத்காரம் செய்ததாக அலெக்ஸ் மீதும், அவருக்கு உறுதுணையாக இருந்ததாக மற்ற 4 பேர் மீதும் திருப்புத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை காலத்திலேயே முருகன், கோவிந்தராஜ் இறந்து விட்டனர். இதில் அலெக்ஸ்க்கு 20 ஆண்டு சிறை, ரூ.6,000 அபராதம், இவரது தாய், தந்தைக்கு தலா ஒரு ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடும் வழங்கவும் நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை