உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் பேரணி 

சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் பேரணி 

தஞ்சாவூர்:'தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை முழுதையும் வழங்கவும், விவசாயிகள் பெயரில் கோடிக்கணக்கில் வாங்கிய வங்கி கடனை தள்ளுபடி செய்து, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள 'சிபில் ஸ்கோர்' பிரச்னைக்கு தீர்வு காணவும் வேண்டும்' என, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.திருஆரூரான் நிர்வாகத்திடம் இருந்து கால்ஸ் நிறுவனம் ஆலையை வாங்கியது. புதிய நிர்வாகம், திருஆரூரான் நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்; விவசாயிகள் பெயரில் வாங்கிய கடனை அடைக்க வேண்டும்; ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி, 2022 நவ., 30 முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், தமிழக அரசு தரப்பில் பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில், நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, கரும்பு விவசாயிகள், சுவாமிமலை கோவிலில் இருந்து, திருமண்டங்குடி போராட்ட பந்தல் வரை, 5 கி.மீ.,க்கு தேசிய கொடியுடன் பாதயாத்திரையாக அரசை கண்டித்து கோஷமிட்டப்படி சென்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ