உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / லாரி -- பைக் விபத்தில் 15 வயது சிறுவன் பலி

லாரி -- பைக் விபத்தில் 15 வயது சிறுவன் பலி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், இடையாத்தி, குறவன் கொல்லைத் தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் அரவிந்த், 15; பத்தாம் வகுப்பு படித்தார்.வேளாம்பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் ரெங்கநாதன், 17. நண்பர்களான இருவரும் நேற்று மாலை, வாட்டாடத்திக்கோட்டை கொல்லைகாடு பகுதிக்கு டூ-வீலரில் சென்றனர்.அப்போது, எதிரே லாரி வந்ததால், டூ வீலரை ரெங்கநாதன் நிறுத்த முயன்றுள்ளார். இதில், பின்னால் அமர்ந்திருந்த அரவிந்த் துாக்கி வீசப்பட்டு, லாரி டயரில் தலை சிக்கி இறந்தார். காயமடைந்த ரெங்கநாதன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார், லாரி டிரைவர் கருப்பையன், 46, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை