உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண்ணெண்ணெய் தகராறு: ஒருவர் கைது

மண்ணெண்ணெய் தகராறு: ஒருவர் கைது

தேனி : வருஷநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடேசன்(60). அங்குள்ள ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் வாங்க சென்றுள்ளார்.கடை விற்பனையாளர் பொன்மலர் செல்வி, 70 சதவீதம் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கப்படுகிறது. மேலும் 2007 ஜூலைக்கு பிறகு வாங்கிய கார்டுகளுக்கு மண்ணெண்ணெய்இல்லை என்றார். இதனால் ஆத்திரமடைந்த நடேசன், வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தார். போலீசார் நடேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ