உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சிகளில் கனவு இல்லம் திட்ட பயனாளி தேர்வில் திணறல் - பெயரளவில் நடந்த சிறப்பு கிராம சபை

ஊராட்சிகளில் கனவு இல்லம் திட்ட பயனாளி தேர்வில் திணறல் - பெயரளவில் நடந்த சிறப்பு கிராம சபை

கூடலுார் : கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறுகின்றனர்.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்து அதற்கான பட்டியலை சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி ஒப்புதல் பெற அரசு அறிவித்துள்ளது. குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் தலைவர் பொன்னுத்தாய் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இத்திட்டத்திற்காக மனு செய்திருந்த 46 பேர் மனுக்களை தகுதியற்றது என நீக்கம் செய்தனர். இரண்டு மனு மட்டும் பரிசீலனைக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கருநாக்கமுத்தம்பட்டி ஊராட்சியில் தலைவர் மொக்கப்பன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 17 பேரின் மனுக்களை எவ்வித காரணங்களையும் கூறாமல் பரிசீலனையில் வைத்துள்ளனர்.இத்திட்டத்தில் தேர்வு செய்ய பயனாளிகளின் தகுதி குறித்து அரசு அறிவித்துள்ள நடைமுறையை பின்பற்றி தேர்வு செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி