| ADDED : ஜூலை 24, 2024 05:54 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு பெண்கள் ஐ.டி.ஐ., யில் நேரடி சேர்க்கை இம்மாதம் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ., முதல்வர் சரவணன் தெரிவித்திருப்பதாவது:8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தையல் தொழில் பிரிவுக்கும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் ஆப் டெஸ்டர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, டெக்ஸ்டைல் மெக்கட்ரானிக்ஸ், ஏ.சி., மெக்கானிக் ஆகிய தொழில் பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். குறைவான இடங்களே உள்ளன. இந்த ஐ.டி.ஐ.,யில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா சீருடைகள், காலணிகள், சைக்கிள், பாட புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணமும் இல்லை. மாணவிகள் அசல் மதிப்பெண் சான்று, டி.சி., ஜாதிச்சான்று, ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தக நகல் மற்றும் ஐந்து பாஸ்போர்ட் அளவு போட்டவுடன் தாங்கள் விரும்பும் தொழில் பிரிவை தேர்வு செய்து சேர்க்கை பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு ஐ.டி.ஐ.,யை 93440 14240 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.