உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை

தேனியில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை

தேனி : தேனி என்.ஆர்.டி., மண்டபத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் செல்லபாண்டியன் தலைமை வகித்தார். காங்கிரஸ், ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க.,ம.நீ.ம., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், நகர், ஒன்றிய, நிர்வாகிகள் பங்கேற்றனர். தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் பேசுகையில், 'தேனி தொகுதியில் தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு நன்கு உள்ளது என்ற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்ததால், இம்முறை நம் கூட்டணி பக்கம் உள்ள ஓட்டு வங்கியை சாதகமாக மாற்றி வெற்றி பெற நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்