உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரு பஸ்கள் மோதலில் அரசு பஸ் கண்ணாடி சேதம்

இரு பஸ்கள் மோதலில் அரசு பஸ் கண்ணாடி சேதம்

தேவதானப்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பரசுராமபுரத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பாலமுருகன் 51. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து கொடைக்கானலுக்கு பஸ்சை ஓட்டி சென்றார். டம்டம் பாறை அருகே கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு சென்று கொண்டிருந்த தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதியது. இதில் அரசு பஸ் முன்பக்கம் கண்ணாடி முழுவதும் உடைந்தது. பாலமுருகன் பிரேக் போட்டதால் பயணிகள் காயமின்றி தப்பினர். விபத்து ஏற்படுத்திய கொடைக்கானல் தாலுகா பூம்பாறையைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கார்த்திக் ராஜாவிடம் 37. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ