உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உயர் கல்வி பயிற்சி பட்டறை

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உயர் கல்வி பயிற்சி பட்டறை

உத்தமபாளையம், : உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில 9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி வழிகாட்டி பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 106 ஆசிரியர்கள் இதில் பயிற்சி பெற்றனர்.பயிற்சியை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பிரபு துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை திட்ட அலுவலர் மோகன் மேற்பார்வையில், கருத்தாளர்களாக பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் முனைவர் நாகஜோதி, கண்ணன், ஆசிரிய பயிற்றுனர் லூகாஸ், ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். பயிற்சியினை பள்ளி கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்