உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு கவர்னர் அனுமதி தராதது ஏன் அமைச்சர் தியாகராஜன் கேள்வி

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு கவர்னர் அனுமதி தராதது ஏன் அமைச்சர் தியாகராஜன் கேள்வி

கம்பம்- 'பா.ஜ.வுடன் அ.தி.மு.க., ரகசிய கூட்டணி இருப்பதால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு கவர்னர் அனுமதி தராமல் உள்ளார்' என அமைச்சர் தியாகராஜன் பேசினார்.கம்பத்தில் அவர் பேசியதாவது : கடந்த முறை தி.மு.க.,விற்கு தேனியில் மட்டும் வெற்றி கிடைக்கவில்லை. ஜெ.,இனி பா.ஜ.வுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று உயிருடன் இருந்த போது கூறினார். அவர் மறைவிற்கு பின் அ.தி.மு.க. பா.ஜ. வுடன் கூட்டணி வைத்து 4 ஆண்டு ஆட்சியை நடத்தியது. இப்போது பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை என்கின்றனர். அது உண்மையென்றால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு கவர்னர் அனுமதி தர மறுக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தெரியாதவர் இந்த ஆட்சிக்கு தொல்லை தந்து கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தை மத்திய அரசு முடக்கி விட்டது.ஜி.எஸ்.டி. என்ற தவறான சட்டத்தில் உள்ளவற்றை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் நான் நிதியமைச்சராக இருந்த போது ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கூறினேன். எல்லோரும் இவன் என்ன சொல்றான் என பார்த்தனர். 2023 ல் நான் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து வெளிவந்த பின், 15 மாநிலங்கள் நான் சொல்வது தான் சரி என்கின்றனர். உத்தரப் பிரதேசத்திற்கு ஒரு லட்சம் கோடியை மத்திய அரசு அள்ளி கொடுத்தும் அம்மாநில பொருளாதாரம் மிகவும் பின்தங்கி உள்ளது. ஒரு குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் அது பெரிய விஷயம். அந்த அளவிற்கு உத்தரப் பிரதேசம் மோசமாக உள்ளது. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை