உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொடுக்கல், வாங்கல் தகராறு 4 பேர் மீது போலீஸ் வழக்கு

கொடுக்கல், வாங்கல் தகராறு 4 பேர் மீது போலீஸ் வழக்கு

பெரியகுளம் : கொடுக்கல் வாங்கல்தகராறில் பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பெரியகுளம் வடகரை வி.ஆர்.பி.,நாயுடு தெருவைச் சேர்ந்த சசிக்குமார் மனைவி கற்பகம் 44. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தோழி கவிதா மூலம் தேவதானப்பட்டி ரமேஷ் மனைவி செல்வி 40. அறிமுகமானார். இந்நிலையில்செல்வி வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன்கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடன் கிடைக்க தாமதமானது. கற்பகம் கொஞ்சம், கொஞ்சமாக செல்விக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதற்கு செல்வி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கற்பகத்திடம் கொடுத்துள்ளார். கற்பகம் பணத்தை எடுத்துள்ளார். எங்களை கேட்காமல் பணம் எப்படி எடுக்கலாம் என கூறி செல்வி, இவரது தந்தை காசிமாயன் உட்பட 4 பேர், கற்பகத்தை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். வடகரை எஸ்.ஐ., மலரம்மாள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்