உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மீன் பிடிக்க பயன்படுத்திய திருட்டு வலைகள் அகற்றம்

மீன் பிடிக்க பயன்படுத்திய திருட்டு வலைகள் அகற்றம்

போடி: போடி அருகே மீனாட்சியம்மன் கண்மயில் அனுமதி இன்றி மீன் பிடிப்பதற்காக பயன்படுத்திய வலைகளை மீன்வளத் துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.வைகை அணை மீன்வளத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கவுதமன். இவர் மீன்பாசி ஏலம் விடும் வரை கண்மாய் பாதுகாக்க, போடி மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களை கொண்டு பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார். 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாயில் உள்ள மீன்களை திருட்டு வலை கொண்டு பிடித்து வருகின்றனர். இதனால் மீன்கள் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதோடு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை தடுக்கும் வகையில் மீன் பிடிப்பிற்காக கண்மாயில் விரிக்கப்பட்டு இருந்த திருட்டு வலைகளை மீன்வளத்துறை ஆய்வாளர் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் 50 க்கும் மேற்பட்ட வலைகள், லாரி டியூப்கள நேற்று அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ