உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயிர் விளைச்சல் போட்டி நடத்தி ஆறு மாதங்களாக முடிவு வெளியாகவில்லை

பயிர் விளைச்சல் போட்டி நடத்தி ஆறு மாதங்களாக முடிவு வெளியாகவில்லை

சின்னமனூர் : மாநில பயிர் விளைச்சல் போட்டியில் முதன் முதலாக பாரம்பரிய ரகமான கருப்பு கவுனி பங்கேற்றது. முடிவுகள் அறிவிப்பு எப்போது என்பது தெரியவில்லை.வேளாண்,தோட்டக்கலைத் துறை சார்பில் பயிர் விளைச்சல் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது . மாநில அளவில் நடத்தப்படும் போட்டியில் ஒவ்வொரு பயிருக்கும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். வேளாண் துறை சார்பில் நெல், கரும்பு, பயறு வகைகளுக்கு நடத்தப்படும். இந்தாண்டு முதன் முதலாக போட்டியில் பாரம்பரிய ரக நெல் பங்கேற்றது.சின்னமனூர் வட்டாரத்தில் மலையடிவார கிராமமான பொட்டிப்புரத்தில் 22 எக்டரில் கருப்பு கவுனி, பூங்காரு,, தூயமல்லி, 60 ம் குறுவை உள்ளிட்ட பல பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டன. அதில் சிவக்குமார் தோட்டத்தில் இறவை சாகுபடி செய்த கருப்பு கவுனி ரகம் கடந்த பிப்., 50 சென்ட் நிலத்தில் விளைந்த கதிர்களை அறுவடை செய்தனர். இந்த ரகத்தின் சாகுபடி காலம் 150 நாட்களாகும்.பயிர் விளைச்சல் போட்டிக்கு நடுவராக விருதுநகர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் மோகன்தாஸ், தேனி துணை இயக்குநர் தேன்மொழி, உதவி இயக்குநர் திலகர், விவசாயி குமார் ஆகியோர் பங்கேற்றனர். அறுவடை நடத்து 6 மாதங்களை கடந்தும் இன்றுவரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. பொதுவாக பயிர் விளைச்சல் போட்டிகளை சத்தமில்லாமல் நடத்துவதும், போட்டி முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் விவசாயிகள் இந்த போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் குறைந்து விடுகின்றனர். போட்டி முடிவுகளை மாநில வேளாண் இயக்குநரகம் உடனே அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி