உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேரூராட்சிகளில் ரூ.1.30 கோடியில் ரோடு பணிகள்

பேரூராட்சிகளில் ரூ.1.30 கோடியில் ரோடு பணிகள்

தேனி, : மாவட்டத்தில் 6 பேரூராட்சிகளில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் வடிகால் வசதியுடன் கூடிய ரோடு அமைக்கப்பட்பட உள்ளது.பேரூராட்சிகளில் மேம்பாட்டு பணிக்காக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது. தேனி மாவட்டத்திற்கு இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1.30 கோடி நிதியில் மார்க்கையன் கோட்டை, ஓடைப்பட்டி, வடுகபட்டி, பண்ணைபுரம், தென்கரை, தேவாரம் பேரூராட்சிகளில் வடிகால் வசதியுடன் கூடிய ரோடு அமைத்தல், க.புதுப்பட்டி பேரூராட்சியில் மயானங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி