உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துக்க வீட்டில் 14 பவுன் நகை மாயம்

துக்க வீட்டில் 14 பவுன் நகை மாயம்

தேனி: வடபுதுப்பட்டி தென்றல்நகர் காந்தி. இவர் ஆக., 8 ல் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவரது மகள் தர்ஷினி 20. தந்தை உடல் வீட்டில் வைத்திருந்த போது, பாட்டி அறிவுரையில் லாக்கரில் இருந்து செயினை எடுத்து தாயார் கங்கா தேவிக்கு தர்ஷினி அணிவித்தார்.நகை பெட்டியை பீரோவில் வைத்து இருந்தார். பீரோவை மூடி சாவியை கையில் வைத்திருந்தார். இந்நிலையில் வீட்டில் வர்ணம் பூசும் பணிகள் முடிந்தது. பீரோவில் உள்ள நகைகள் ஆக.12ல் சரிபார்த்த போது தங்க ஆரம், நெக்லஸ், செயின்கள், மோதிரம் உட்பட ரூ.4.20 லட்சம் மதிப்பிலான 14 பவுன் நகைகள் காணவில்லை. தந்தை இறப்பிற்கு வந்தவர்களிடம் விசாரித்த போதும் நகைகள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. தர்ஷினி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை