உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காளவாசலுக்கு மண் அள்ளிய 2 பேர் கைது

காளவாசலுக்கு மண் அள்ளிய 2 பேர் கைது

ஆண்டிபட்டி: ராமகிருஷ்ணாபுரம், ராயவேலூர் பகுதியில் அனுமதி இன்றி காளவாசல் தேவைக்கு மண் அள்ளப்படுவதாக ராஜதானி போலீசருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,ஜான் செல்லத்துரை மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது ராயவேலூர் அருகே தனியார் தோட்டத்தில் அனுமதி இன்றி காளவாசலுக்கு மண் அள்ளிக் கொண்டிருந்தனர். அனுமதி இன்றி மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய மண் அள்ளும் இயந்திரம் மற்றும் இரு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்து ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வல்லரசு 24, பிரதீப் 20 ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை