உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஸ்கேன் மிஷின் வாங்கி தருவதாக தேனியில் ரூ.25.48 லட்சம் மோசடி

ஸ்கேன் மிஷின் வாங்கி தருவதாக தேனியில் ரூ.25.48 லட்சம் மோசடி

தேனி:தேனியை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் ஸ்கேன் மிஷின் வாங்கி தருவதாக கூறி ரூ.25.48 லட்சம் மோசடி செய்த நாமக்கல்மாவட்டம் ராசிபுரம் வேணுகோபால் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேனியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் ஸ்கேன் சென்டர் நடத்தி வருகிறார். அதனை துவங்குவதற்கு முன், நண்பர் வெங்கட் உடன் ஆலோசித்தார். அவர் மூலம் வேணுகோபால் அறிமுகம் ஆனார். மேலும் ஸ்கேன் மிஷின்கள் ரூ.75 லட்சத்திற்கு வாங்கித் தருவதாக கூறினார். இதனை நம்பிய வேல்முருகன் ரூ. 33.48 லட்சத்தை வேணுகோபால் வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக அனுப்பினார். பணத்தை வாங்கி வேணுகோபால் மிஷின்களை அனுப்பவில்லை. பின்னர் ரூ.8 லட்சத்தை மட்டும் வேல்முருகனிடம் திருப்பி வழங்கினார். மீதித்தொகை ரூ.25.48 லட்சத்தை தரமால் தொடர்ந்து ஏமாற்றினார். பணத்தை இழந்த வேல்முருகன் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வேணுகோபால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை