உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மக்களுடன் முதல்வர் முகாமில் 537 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் முகாமில் 537 மனுக்கள்

தேனி, : தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி, அரண்மனைப்புதுார், கொடுவிலார்பட்டி ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் அன்னஞ்சி விலக்கில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் பட்டா மாறுதல், பெயர் மாற்றம், புதிய பட்டா கோரி 300 பேரும், உதவித்தொகை, மருத்துவசேவை, மின்கம்பங்கள் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 237 மனுக்கள் என 537 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். முகாமில் எம்.எல்.ஏ., சரவணக்குமார், டி.ஆர்.ஒ., ஜெயபாரதி, தேனி தாசில்தார் ராணி மனுக்களை பெற்றனர். ஊராட்சி தலைவர்கள் பாண்டியம்மாள், பிச்சை, ஈஸ்வரி, ஊராட்சி செயலாளர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ