உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

போடி: போடி அருகே பத்திரகாளிபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் காளிராஜ் 31. இவர் தேனி இந்தியன் வங்கியில் வீட்டு கடன் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காளிராஜ் தனது மனைவி ஞானப்பிரியா, மகன் நிவாஸ் பாண்டியன் உடன் டூவீலரில் போடி செல்ல மேலச்சொக்கநாதபுரம் ரோட்டில் வந்துள்ளார். பின்பக்கமாக டூவீலரில் வேகமாக வந்த நபர், ஞானப்பிரியாவின் கழுத்தில் அணிந்து இருந்த ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பு உள்ள 6 பவுன் தாலி செயினை பறித்து சென்றார். புகாரில் போடி தாலுகா போலீசார் செயின் பறித்த சென்ற நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை