உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 9 பேர் மீட்பு

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 9 பேர் மீட்பு

பெரியகுளம்:தேனிமாவட்டம் கும்பக்கரை ஆற்றில் குளிக்கும் போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் மீட்டனர்.பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால்ஆக., 13 முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெரியகுளம் பெருமாள்புரம் இ.பி., காலனி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் 37, ரம்யா 32, ஜெயா 40, ஈஸ்வரன் 40, சங்கீதா 27, சுதர்சன் 11, மோனிகா 9, மது 3,சுகன்யா 3 கியோர் நேற்று கும்பக்கரை கீழ் பகுதி அழகுபாறை ஆற்று பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். மாலையில் திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். ஆற்றின் மறு கரைக்கு சென்று சத்தமிட்டனர். வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், எஸ்.ஐ., மலரம்மாள் மற்றும் 5 போலீசார் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டனர். 108 ஆம்புலன்சில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அனைவரும் நலமாக இருப்பதை உறுதி செய்தனர். அதிலேயே வீட்டிற்கு அழைத்துசென்றனர்.

தோட்டத்திலேயே தங்கினர்

நேற்று சின்னூர் அருகே கும்பாம்பாறை விவசாய தொழிலாளர்கள் 7 பேர் கல்லாற்றை தாண்டி விவசாய பணிக்கு சென்றனர். நேற்று மாலை வீடு திரும்பும் போது கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இவர்களை மீட்க பெரியகுளம் தீயணைப்பு துறையினர் சென்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் தொழிலாளர் தோட்டத்தில் தங்கினர். வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் அக்கரைக்கு வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி