உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்களுக்கு அழைப்பு

பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்களுக்கு அழைப்பு

தேனி: தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிக்க நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தொழில் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை பொருள், பணம், களப்பணியின் மூலம் வழங்கலாம். மாநிலத்தில் உள்ள எந்த பள்ளியின் தேவையையும் பூர்த்தி செய்யலாம். விரும்புவர்கள் என்ற தளத்தில் பதிவு செய்யலாம். பொதுமக்கள் பங்களிப்பை இந்த தளத்தில் வெளிப்படையாக தெரிவிக்கலாம். பங்களிப்பவர்களுக்கு சான்றிதழ், வரிவிலக்கு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அரசு பள்ளிகளை மேம்படுத்த பங்களிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்திட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஷஜீனா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சி.இ.ஓ., இந்திராணி, கல்வி செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ