உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவர் மீது வழக்கு

மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி : குழந்தை இல்லை என மனைவியை கணவர் அடித்ததால் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் அய்யன் கோட்டையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, பஞ்சு தம்பதிகள் மகள் வான்மதி 28. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துராஜ் 30. என்பவருக்கும் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் வான்மதியை முத்துராஜ் திட்டியும், அடித்துள்ளார். இதனால் மனவேதனையில் வான்மதி விஷமருந்து குடித்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, தாயார் பஞ்சுவிடம் இதுகுறித்து தெரிவித்து விட்டு இறந்தார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன் தற்கொலைக்கு தூண்டியதாக முத்துராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை