உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவியை கண்டித்த கணவரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நால்வர் மீது வழக்கு

மனைவியை கண்டித்த கணவரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நால்வர் மீது வழக்கு

போடி : போடி ராசிங்காபுரத்தில் உணவு சமைக்காத மனைவியை கண்டித்த கணவரை, மரத்தில் கட்டி வைத்து தாக்கிய உறவினர்கள் நால்வர் மீது போடி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.ராசிங்காபுரம் சமத்துவ புரத்தில் வசிப்பவர் அழகேசன் 39. இவரது மனைவி கோகிலா 32. இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி உணவு சமைக்காமல் இருந்துள்ளார். அழகேசனின் மாமியார் பஞ்சவர்ணம், உறவினர்கள் முருகன், ஈஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து, அழகேசனை தகாத வார்த்தைகளால் பேசி, மரத்தில் கட்டி வைத்து, அடித்து காயம் ஏற்படுத்தினர். அழகேசன் புகாரில் போடி தாலுகா போலீசார் பஞ்சவர்ணம், முருகன் உட்பட நால்வர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை