ஆசை காட்டி மோசம் செய்த அண்ணன், தம்பி மீது வழக்கு
பெரியகுளம்: வீட்டினை விற்பனை செய்வதாக ரூ.5.90 லட்சம் அட்வான்ஸ் பெற்று விற்காமல் காலதாமதம் செய்யும் அண்ணன், தம்பியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் ரியாஜ் ரகுமான் 47. இவரிடம் கொடைக்கானல் பிஸ்மில்லா 2 வது தெருவைச் சேர்ந்த தினகரன் செல்லையா 40. இவரது தம்பி பீட்டர் 34. ஸ்டேட் பேங்க் காலனியில் பீட்டருக்கு சொந்தமான வீட்டிமனையை, இருவரும் ரியாஜ் ரகுமானுக்கு விற்பதாக ரூ.19 லட்சத்திற்கு விலைபேசியுள்ளனர். அட்வான்ஸாக ரியாஸ் ரகுமான் வீட்டில் வைத்தும், வங்கியில் பரிவர்த்தனை மூலம் மூன்று மாத இடைவெளியில் ரூ.5.90 லட்சம் பணத்தை இருவரிடம் வழங்கியுள்ளார். இதற்கு கிரய உடன்படிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து ரியாஜ்ரகுமான், கிரய உடன்படிக்கையின்படி மீதம் பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டை தனக்கு விற்பனை செய்து தருமாறு கேட்டுள்ளார்.அதற்கு இருவரும் காலதாமதம் செய்துள்ளனர். அட்வான்ஸ் தொகையை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.வடகரை எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து அண்ணன், தம்பியிடம் விசாரணை செய்து வருகிறார்.-