உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் பெண்களுக்கு சிறப்பு கருத்தடை முகாம் நடத்த உத்தரவு குறைந்தது 5 ஆப்பரேஷன் செய்ய இலக்கு

மாவட்டத்தில் பெண்களுக்கு சிறப்பு கருத்தடை முகாம் நடத்த உத்தரவு குறைந்தது 5 ஆப்பரேஷன் செய்ய இலக்கு

கம்பம், : பெண்களுக்கான சிறப்பு கருத்தடை ஆப்பரேஷன் முகாம்கள் நடத்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பலவேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 8வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தவும், ஒரு முகாமில் குறைந்தது 5 பெண்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக குடும்ப நலத் துறை துணை இயக்குநர் அன்புச்செழியன் கூறுகையில்,உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு நாட்கள் நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் தேவதானப் பட்டி ஆக.22, செப்.19, டொம்புச்சேரியில் ஆக 23, செப்.13, கூடலூரில் ஆக.27, செப். 24, கடமலைக் குண்டில் ஆக: 19 , செப். 23, ராஜதானியில் ஆக, 30, செப்.20, ஓடைப்பட்டியில் ஆக . 14, செப்.18, தேவாரத்தில் ஆக.. 26, செப்.26, வீரபாண்டியில் ஆக . 21, செப். 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு முகாமிற்கும் செலவிற்காக ரூ.7400 வீதம் இரண்டு முகாம்கள் நடத்த ரூ. 14,800 வட்டார மருத்துவ அலுவலர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை