| ADDED : ஏப் 18, 2024 06:06 AM
தேனி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் பெண் அலுவலர்கள் பங்கேற்கும் 'பிங்க்' ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.ஆண்டிப்பட்டியில் பூத் எண்.40, ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, பெரியகுளத்தில் பூத்எண்.10 வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி, போடியில் எண்.116 அரசு மேல்நிலைப்பள்ளி மேலசொக்கநாதபுரம், எண்.208, பி.சி.பட்டி பழனிப்பா பள்ளி,கம்பம் தொகுதியில் 176 உத்தமபாளையம் அல்ஹிமா பள்ளி என 4 இடங்களில் பிங்க் ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. இந்த பிங்க் ஓட்டுச்சாவடிகளில் பெண் அலுவலர்கள் முழுவதுமாக தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.ஆண்டிபட்டியில் பூத் எண். 55 ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியகுளத்தில் பூத் எண். 110, தென்கரை அக்ரஹாரம் டிரைம்ப் நடுநிலைப்பள்ளி, போடியில் பூத் எண்.72 இசட்.கே.எம்., மேல்நிலைப்பள்ளி, கம்பம் உத்தமபுரம் இலாஹி பள்ளி என 4 இடங்களில் மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. இங்கு வாக்காளர்களுக்கு கூடுதல் வசதிகளாக பேன் வசதி, அமர நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்ட உள்ளன.இவை தவிர பெரியகுளம் தொகுதி பூத் எண்.131, லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறன் ஆசிரியர்கள், அலுவலர்களால் வழிநடத்தப்படும் ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. இந்த ஓட்டுச்சாவடியில் மாற்றுத்திறன் அலுவலர்கள் ஓட்டுப்பதிவை நடத்துவார்கள்.முதல் முறையாக பிங்க் மற்றும் மாற்றுத்திறன் அலுவலர்கள் வழிநடத்தும் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.