உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேக்கடி ஷட்டர் கால்வாயில் தவறி விழுந்த காட்டு யானை -நீர் நிறுத்தப்பட்டதால் வெளியேறியது

தேக்கடி ஷட்டர் கால்வாயில் தவறி விழுந்த காட்டு யானை -நீர் நிறுத்தப்பட்டதால் வெளியேறியது

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் பகுதி, தேக்கடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே உள்ளது. நேற்று காலை வனப் பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை, ஷட்டரை ஒட்டியுள்ள திறவை வாய்க்காலில் தவறி விழுந்தது. ஷட்டருக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, பல மணி நேரம் தத்தளித்தது.இதை அறிந்த தமிழக நீர்வளத்துறையினர், கேரள வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் இருந்தனர். இதற்காக தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தப்பட்டது. அதன் பின், யானை கரைப்பகுதியில் இருந்து தானாக வெளியேறி, வனப்பகுதிக்குள் சென்றது.அதன் பின், மதியம் மீண்டும் தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்