உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி நகராட்சியில் ஆதார் மையம் தினமும் செயல்படும்

தேனி நகராட்சியில் ஆதார் மையம் தினமும் செயல்படும்

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் நாளை(ஆக.,1) முதல் தினமும் செயல்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் ஆதார் மையம் செயல்படுகிறது. தேனி நகராட்சியில் செயல்பட்ட ஆதார் மையம் பொதுமக்கள் போதிய அளவில் செல்லாததால் செயல்படுவதில் சிரமம் இருந்தது. இதனால் வாரத்தில் சிலநாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. தேனி நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் நாளை( ஆக.,1) முதல் தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். பொதுமக்கள் அதனை பயன்படுத்தி புதிதாக ஆதார் பதிவு செய்தல், புதுப்பித்தல், முகவரி மாற்றம், அலைபேசி எண் மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். என ஆதார் சேவைமைய அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை