உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய சிலம்ப போட்டியில் போடி மாணவர்கள் சாதனை

தேசிய சிலம்ப போட்டியில் போடி மாணவர்கள் சாதனை

போடி: தேசிய அளவில் பெங்களூரில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.பெங்களூர் எஸ்.எஸ்.கே., அகடாமி, எம்.ஜி.ஆர்., சார்பட்டா சிலம்ப அகடாமி, தேனி மாவட்ட சிலம்ப விளையாட்டு சங்கம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டி பெங்களூரில் நடந்தது. போட்டியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் போடி நீலமேகம் பிள்ளை அகடாமி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.12 வயது பிரிவில் போடி ஜா.க.நி.,மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சக்தி ஸ்ரீ, ரித்திஷா, மாணவர்கள் கவின்குமார், ரித்திக், ஷேவந்த், போடி சிசம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி ரேணா, தேனி லிட்டில் கிங்டம் பள்ளி மாணவி தேஜா ஸ்ரீ, போடி காமராஜ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரகதிஷாவும்,19 வயது பிரிவில் போடி சிசம் மெட்ரிக் பள்ளி மாணவர் கோகுல்பாலன், நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் நாவலன், ஸ்பைஸ் வாலி பப்ளிக் பள்ளி மாணவர் காங்கேஷ், சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுக தர்ஷினி, துர்க்கை வேணி, பாண்டிமீனா, தேனி நாடார் கலை கல்லூரி மாணவி காருண்யா, தேவதானப்பட்டி மாணவி காருண்யா தேவி, தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் பிரேம்குமார் ஆகியோர் முதலிடம் பெற்றனர். 12 வயது பிரிவில் போடி ஜ.கா.நி.,ஆரம்பப் பள்ளி மாணவி ஹேமநிலா, மாணவர்கள் தட்சணேஸ்வர், சாய்சரண், விஷ்ணு சக்தி, போடி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் அவினாஷ், காமராஜ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் அன்சித், போடி ஸ்பைஸ்வாலி பப்ளிக் பள்ளி மாணவி ஹர்ஷா ஆகியோர் 2 ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் குமார், செயலாளர் சொக்கர் மீனா, சிலம்பாட்ட கழக தொழில்நுட்ப இயக்குநர் நீலமேகம், மாஸ்டர்கள் மோனீஸ்வர். தீபன் சக்கரவர்த்தி, வாஞ்சிநாதன், மஞ்சுளா ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ