உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆராய்ச்சி நிலையத்தில் புதிய திராட்சை ரகங்கள் கண்டறிய நடவடிக்கை தேவை

ஆராய்ச்சி நிலையத்தில் புதிய திராட்சை ரகங்கள் கண்டறிய நடவடிக்கை தேவை

கம்பம்: கோவை வேளாண் பல்கலை பழத்துறையும், ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையமும் இணைந்து திராட்சையில் புதிய ரகங்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு ஆண்டுதோறும் திராட்சை சாகுபடியாகும் பகுதியாக உள்ளது. பன்னீர் திராட்சையே பெரும்பாலும் சாகுபடி செய்யப்படுகிறது. மகசூல் அதிகம் தரும் ரகங்கள், ஏற்றுமதிக்கு தகுதியான ரகங்கள், செவட்டை, சாம்பல் நோய்களை எதிர்கொள்ளும் ரகங்கள் இல்லாமல் தொடர்ந்து ஒரே ரகத்தை சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கோவை வேளாண் பல்கலையின் பழத்துறையும், ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையமும், 'அப்பீடா' எனப்படும் ஏற்றுமதி அமைப்பின் உதவியுடன் புதிய ரகங்களை ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் சோதனை ஓட்ட முறையில் சாகுபடி செய்ய கடந்தாண்டு முடிவு செய்தனர்.ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம், கோவை வேளாண் பல்கலையின் பழத்துறையுடன் இணைந்து கிரீம்சன், ரெட் குளோப், தாம்சன், பேன்டசி, நானா சாகிப் உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்ய பணிகளை துவக்கினார்கள். இந்த ரகங்கள் ஏற்கெனவே உள்ளது. அதில் மாற்றங்கள் செய்து தேர்வு ரகமாக சாகுபடி செய்து, விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக இருந்த சுப்பையா, சமீபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் ஆராய்ச்சி நிலையத்திற்கு புதிதாக தலைவர் நியமிக்கப்படவில்லை. எனவே பணிகளில் சுணக்கம் உள்ளது. புதிய திராட்சை ரகங்கள் கண்டுபிடிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு, திராட்சை விவசாயிகளுக்கு புதிய ரகங்களை அறிமுகம் செய்ய ஆராய்ச்சி நிலையம் முன்வர திராட்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை