உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் மண்ணெண்ணெய்யில் தண்ணீர் கலப்பு: விசாரணை துவக்கம்

ரேஷன் மண்ணெண்ணெய்யில் தண்ணீர் கலப்பு: விசாரணை துவக்கம்

மூணாறு : மூணாறு பகுதியில் ரேஷன் கடைகளுக்கு தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் வினியோகிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை துவங்கியது.கேரளாவில் ரேஷன் கடைகளுக்கு தேவையான பொருட்கள் அரசு சார்பிலான 'சப்ளை கோ' நிறுவனம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. மூணாறில் ஊராட்சி அலுவலகம் ரோட்டில் உள்ள சப்ளை கோவுக்கு சொந்தமான மண்ணெண்ணெய் டிப்போவில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயில் தண்ணீரின் அம்சம் உள்ளதாக தெரியவந்தது.அது தொடர்பாக புகார் எழுந்ததால் டிப்போவில் பொறுப்பு வகித்தவர் நீண்ட விடுமுறையில் சென்றார். அங்கு புதிதாக பொறுப்பேற்றவர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்படி பெட்ரோலியத்துறையினர் டிப்போவில் ஆய்வு நடத்தியதில் 24 ஆயிரம் லிட்டர் வீதம் கொண்ட இரண்டு டேங்க்குகளில் 562 லிட்டர் தண்ணீர் கலந்தது கண்டு பிடிக்கப்பட்டது.ஏற்கனவே 562 லிட்டர் மண்ணெண்ணெய்யை வெளி சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை நடத்தி விட்டு அதனை சமாளிக்க தண்ணீரை கலந்ததாக தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக டிப்போவில் பொறுப்பு வகித்த ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரின் உறவினரை சுற்றி விசாரணை நடக்கிறது. அவர் இதே துறையில் வேறு இடத்தில் பணி செய்தபோது பண மோசடியில் சிக்கினார். அதனால் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை