உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேளாண் துறை நிலக்கடலை விதை வழங்க வலியுறுத்தல்

வேளாண் துறை நிலக்கடலை விதை வழங்க வலியுறுத்தல்

கம்பம், : மானாவாரி நிலங்களில் விதைப்பு செய்ய நிலக்கடலை விதை விற்பனையை வேளாண் துறை உடனே துவக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் ரோட்டிற்கு மேற்கு பக்கம் லோயர்கேம்பில் ஆரம்பித்து தேவாரம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும். சின்னமனூர் வட்டாரத்திலும் மானாவாரி காடுகளில் நிலக்கடலை சாகுபடி செய்வார்கள். தற்போது கோடை மழை பெய்து சாகுபடிக்கு ஏற்ற சூழல் உள்ளது. எனவே, வேளாண் துறை விதை நிலக்கடலை விற்பனை செய்ய வேண்டும். ஆனால் வேளாண் துறை அமைதி காத்து வருகிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலக்கடலை சாகுபடி பரப்பு மிகவும் குறைந்து விட்டது. விதை கடலை விலை அதிகமானதும், பறிப்பு கூலி உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததும் காரணமாக இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு தற்போது சூழல் நன்றாக உள்ளது. எனவே விதை கடலை விற்பனை செய்ய வேண்டும்.நிலக்கடலை சாகுபடியை ஊக்குவிக்க கம்பம் வேளாண் துறை விதைக்கிராமம் திட்டத்தில் விதை நிலக்கடலை விற்பனை செய்கிறது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய பருப்பு 45 கிலோவும், நிலக்கடலைதொலியுடன்60 கிலோவும், கிலோ விலை ரூ.96. அதில் மானியம் ரூ.36 என கடந்தாண்டு வழங்கினார்கள். ஆனால் இந்தாண்டு இதுவரை விதை கடலை விற்பனை தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.சாம்பிள் வந்துள்ளதாகவும், ஆய்வக சான்றை எதிர்பார்ப்பதாகவும், விரைவில் விற்பனை செய்வோம் என்றும் வேளாண் துறை கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை