உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு வேளாண் மாணவி விளக்கம்

விவசாயிகளுக்கு வேளாண் மாணவி விளக்கம்

உத்தமபாளையம்: மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் குழு உத்தமபாளையம் பகுதியில் தங்கி விவசாயிகளிடம், அவர்கள் பின்பற்றும் தொழில் நுட்பங்களை தெரிந்தும், நவீன தொழில் நுட்பங்களை விளக்கியும் கூறி வருகின்றனர். தேவாரம் பகுதியில் மாணவி சுவாதி தலைமையிலான குழுவினர் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பொறிகள் பற்றி விளக்கினர். டெல்டா பொறி என்பது லெபிடோப்டெரா பூச்சிகளை கண்காணிப்பதற்கான சிறந்த பொறியாகும். நீடித்த நெளிந்த பிளாஸ்டிக் கால் ஆனது.இது புற ஊதா மற்றும் மழையை எதிர்க்கும் திறன் கொண்டது. பல பருவங்களில் அதன் பயன்பாட்டை செயல்படுத்தும் திறன் கொண்டது என விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை